Add parallel Print Page Options

நீங்கள் தற்பெருமை பாராட்டுவது நல்லதல்ல. உங்களுக்கு இந்தப் பழமொழி தெரியும். “சிறிது புளிப்பு மாவானது எல்லா மாவையும் புளிக்கவைக்கும்.” புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய[a] கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார். எனவே நமது பஸ்கா விருந்தை உண்போமாக. ஆனால் புளித்த பழைய மாவைக்கொண்ட அப்பத்தை உண்ணக் கூடாது. புளித்த மாவு பாவத்தையும் தவறுகளையும் குறிக்கும். ஆனால் நாம் புளிக்காத மாவுடைய அப்பத்தை உண்போம். அது நன்மை, உண்மை ஆகியவற்றைக் குறிக்கும் அப்பமாகும்.

Read full chapter

Footnotes

  1. 1 கொரி 5:7 பஸ்கா அப்பம் இது ஒவ்வொரு ஆண்டும் யூதர்கள் பஸ்காவின்போது உண்ணும் புளிப்பில்லாத அப்பம். பஸ்கா அப்பம் புளிப்பில்லாது இருப்பது போலவே, கிறிஸ்தவர்கள் பாவம் இல்லாது இருப்பார்கள் என்று பவுல் கருதுகிறார்.